வெள்ளி மலை நடுகற்கள்
முனைவர் கோ.சசிகலா, மதுரை
இடம் : மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டியிலிருந்து வடமேற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள வௌ்ளி மலை, கருப்பர் கோயிலில் உள்ள வில்லடியான் சாமி இரண்டு நடுகற்கள்.
காலம் : கி.பி.11-12 ஆம் நூற்றாண்டு
செய்தி : அதியம் மகன் அரையன். செயிக்கன் என்பவன் போர்க்களத்தில் இறந்ததமைக்கு நடுகல் இட்டமை.
கல்வெட்டு:
1. உச்சி வடக்கில்
2. மங்கலத்தில்
3. அதியம் மக
4. யரையன் கல்
5. லூன்றி தந்தது
6. பட்டான் யிது
7. செயிக்கன் யிவ
8. ரன் மகன் வால
9. ன்
இடம் : மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டியிலிருந்து வடமேற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள வௌ்ளிமலை, கருப்பர்கோயிலில் உள்ள வில்லடியான் சாமி இரண்டு நடுகற்கள்.
காலம் : கி.பி.11-12 ஆம் நூற்றாண்டு
செய்தி : போர்க்களத்தில் இறந்ததமைக்கு நடுகல் இட்டமை.
கல்வெட்டு:
1. . . ந்ந வட
2. க்கில்
3. மங்கலத்து
4. லயார;
5. ங்கை
6. கல்லூருக
7. ரை நகதுய
8. நனுப்ப
9. ங்கன் யம
10. தாடை
11. . . .
12. ன் ம
13. கன் வெ
14. ள்ளி (யா)
15. ன்
மதுரை மாவட்ட புதிய நடுகற்கள்
தற்போது மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், கொட்டாம்பட்டியிலிருந்து வடமேற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள வௌ்ளிமலை என்னும் கிராமத்தில் உள்ள கருப்பர் கோயிலின் அருகே கட்டுரையாளரால் இரண்டு நடுகற்கள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. கி.பி.11-12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவ்விரண்டு நடுகற்களும் தமிழ்க் கல்வெட்டுகளைப் பெற்றுள்ளன. மேலும் இந்நடுகற்களில் இறந்த வீரர்களின் உருவங்கள் புடைப்புச்சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளன. உச்சிக்கொண்டையும், காதுகளில் வளையமும், மார்பில் சன்னவீரமும், கழுத்தணிகளும், இடையாடை முடிச்சுடன் கூடிய அரையாடையும் வீரர்களின் ஆடையணிகலன்களாகக் காட்டப்பட்டுள்ளன. முதலாம் நடுகல்லில் வீரர் வலதுகையில் வில்லைத் தாங்கியும், இடதுகையில் நீண்ட வாளைப் பிடித்தபடியும் நேராக நின்ற நிலையில் உள்ளார். இரண்டாவது நடுகல்லில் வீரர் இடதுகையில் வில்லைத் தாங்கியும், வலதுகையில் நீண்ட வாளைப் பிடித்தபடியும் நேராக நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளார்.
இந்நடுகற்கள் கூறும் கல்வெட்டுச் செய்தியானது வடக்கில் மங்கலம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையில் இறந்த இருவீரர்களுக்கு நடுகல் எடுக்கப்பெற்றமையைக் குறிப்பிடுகிறது. முதலாம் நடுகல் சண்டையில் இறந்த செயிக்கன் என்பவனுக்கு அதியம் அரையன் மகன் கல்லூன்றித் தந்ததைக் குறிப்பிடுகிறது. இரண்டாம் நடுகல்லில் இறந்த வீரன் பெயர் வௌ்ளியான் எனக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
வாழ்க
ReplyDeleteவாழ்க
ReplyDeleteநன்றி நண்ப!
Delete